"சிறுநீரக கற்கள்" பொதுவான உணவு முறைகள்

By: No Source Posted On: July 25, 2024 View: 277

"சிறுநீரக கற்கள்" பொதுவான உணவு முறைகள்

 

இளநீர்

 

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன.

 

 

இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.

 

காரட், பாகற்காய்

 

இவற்றில் சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப் பட்டுள்ளது.

 

பழங்கள், பழச்சாறுகள்

 

வாழைப்பழம், எலுமிச்சை

 

இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட் சத்தும் அதிகம் உள்ளன.

 

இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

 

பைபானப்பிள் சாறு

 

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன.

 

கொள்ளு

 

 

இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள்.

 

பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்

 

போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன.

 

பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

கற்கள் வருவதையும் தடுக்கும்.

 

உப்பு

 

உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியா வதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

 

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் காய்கறிகள்

 

தக்காளி விதைகள், பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.


கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் அதிகம் உள்ளது.

 

பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் உள்ளன.

 

இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.

 

பழங்கள்

 

சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

 

எள்

 

 

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

 

அசைவ உணவுகள்

 

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக் கறி, முட்டை, மீன் இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம்.

 

யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

 

முந்திரிப்பருப்பு

 

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது.

 

சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை ஆகும். இதனைத் தவிர்க்கவும்.

 

சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது. எச்சரிக்கை தேவை.

 

தினமும் 3-4 லிட்டர் நீர் அருந்தவும், கடினத்தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

 

கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள்

 

கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை கற்கள்

 

தினமும் 3-4 லிட்டர் நீர் அருந்தவும்.

 

அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள்ளவும்.

 

வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத் தவிர்க்கவும்.

 

உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

 

யூரிக் அமில வகை கற்கள்

 

தினமும் 3-4 லிட்டர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

 

ஸ்ட்ரூவைட் வகை கற்கள்

 

இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன.

 

மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 3 லிட்டர் நீர் அருந்தவும்.

 

சிஸ்டின் வகைக் கற்கள்

 

இவை மிக அபூர்வமானவை.

 

மீன் உணவை தவிர்க்கவும்.

 

தினமும் 3-4 லிட்டர் நீர் அருந்தவும்.

 

சிறுநீரக கற்கள் எந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

Tags:
#Kidney Stone  # சிறுநீரக கற்கள்  # Health Tips 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos