தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள்
கீரைகள்
பச்சை கீரைகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
தண்ணீர்
தண்ணீர் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
உடல் நீர்ச்சத்துடன் இருந்தாலே பதும், ஒட்டுமொத்த உடல் இயக்கமும் நன்றாக இருக்கும்.
பெர்ரிகள்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி என பெர்ரி பழங்களில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது.
உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.
மீன்
சதை அதிகம் உள்ள சால்மன், மெக்கரீல், சார்டைன் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் இதயம் மற்றும் மூளைக்கு மிகவும் நல்லது.
இவை நல்ல புரதச்சத்தையும் வழங்குகின்றன.
நட்ஸ் மற்றும் சீட்ஸ்
பாதாம், வால்நட், சியா, ப்ளாக்ஸ் விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை நாட்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
முழு தானியங்கள்
குயினோவா, சிவப்பரிசி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில், நார்ச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்களும் நிறைந்துள்ளது.
இது உடலுக்கு தேவையான ஆற்றவை வழங்குவதுடன், ஜீரண மண்டலத்துக்கும் உதவுகிறது.
கிரீக் யோகட்
கிரீக் யோகர்ட்டில் புரோபயோடிக்குகள் அதிகம் உள்ளது.
இதில் கால்சியம், புரதம் ஆகியவையும் உள்ளன.
அது ஜீரணத்துக்கு உதவி, குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.
முட்டை
முட்டை, புரதச்சத்து நிறைந்த உணவு.
தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொண்டுள்ளது.
இவை தசை வளர்ச்சிக்கும், அதை சரிசெய்யவும் உதவுகிறது.
அவகோடா
அவகோடா ஊட்டச்சத்து நிறைந்த உணவு.
இதில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பொட்டசியம் நிறைந்துள்ளது.
இது இதய ஆரோக்கியம் மற்றும் சருமத்துக்கும் நல்லது.
பருப்பு வகைகள்
பீன்ஸ், கடலை, கொண்டை கடலை போன்றவற்றில் தாவரம் சார்ந்த புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்துள்ளன.
இவை எடை மேலாண்மைக்கு உதவுகின்றன.
ப்ரோகோலி
ப்ரோகோலியில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பிட்ட புற்றுநோய்களையும் தடுக்கிறது.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
இது நாட்பட்ட நோய்கள் வராமல் காக்கிறது.
பூண்டு
பூண்டில் உள்ள அள்ளிசின், இதில் பல்வேறு அரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
இவை உடல் ரத்த அழுத்தத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிட்ரஸ் நிறைந்த பழங்கள்
ஆரஞ்ச், திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இறைச்சி
ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றி அதிக தரமான புரதச்சத்து நிறைந்துள்ளது.
இவை தசையை மேலாண்மை செய்வதிலும், அதை சரி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
Tags:
#Health Tips
# Vegetables
# Fruits
# Meat