மத்திய பட்ஜெட் குப்பை - அமைச்சர் TRB ராஜா

மத்திய பட்ஜெட் குப்பை - அமைச்சர் TRB ராஜா
By: No Source Posted On: July 24, 2024 View: 3061

மத்திய பட்ஜெட் குப்பை - அமைச்சர் TRB ராஜா

 

மத்திய பட்ஜெட்டில் வெறும் குப்பை தான் உள்ளது.

 

பார்க்க கூடிய அளவில் எதுவும் இல்லை என தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா விமர்சனம்.

 

தமிழ்நாட்டிற்கும், ஐயக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைபெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

 

இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும் - அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி

 

இந்தியா ஏற்றுமதி செய்யும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 30 சதவீதம் தயாரிக்கப்படுகிறது.

 

புதிய நிறுவனங்கள் வருகையால் இது மேலும் அதிகரிக்கும்.

 

CII எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக INVESTOPIA GLOBAL என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் நடைபெற்றது.

 

 

 

இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

 

ஐக்கிய அரபு எமிட்ரேட்ஸ் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

 

அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர் சந்திப்பு

 

 

இதற்கு முன்பு துபாய்-யில் ஒரு நிகழ்வில் UAE பொருளாதர அமைச்சரை சந்தித்த போது அவரை சென்னைக்கு அழைத்து ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.

 

அதன்படி இன்று இந்த மாநாடு நடைபெறுகிறது.

 

நாளை முதலமைச்சரை UAE பொருளாதார துறை அமைச்சர் சந்தித்து பேச இருக்கிறார்.

 

முதலீடுகள் குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

 

தமிழ்நாட்டுக்கும்,ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே பல புதிய முதலீடு ஒப்பந்தகள் நடைபெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

 

தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது.

 

இதில் UAE யும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் வளர்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும்.

 

 

இதன் மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

 

பல்வேறு முதலீட்டாளர்கள் அங்கிருந்து வந்துள்ளனர்.

 

இந்த மாநாடு முழுமையாக முடிந்த பிறகு தான் இந்த மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடுகள் வர போகிறது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும்.

 

வெறுமனே இத்தோடு முடிந்து விடமால் இதனை தொடர்ந்து பின்தொடர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

 

அதன்படி ஒரு குழுவும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்களில் 30 சதவீதம் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

 

இது மேலும் அதிகரிக்கும்.

 

தமிழகத்தில் இருந்து சென்ற ஆண்டு 9 பில்லியன் டாலர் என்று இருந்த எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி இந்த ஆண்டு 12 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது.

 

இது மேலும் அதிகரிக்கும்.

 

இந்த முறை மேலும் பல புதிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் வர உள்ளது.

 

அந்த நிறுவனங்கள் வந்த பிறகு மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட உள்ளது.

 

இதன் மூலம் தமிழக அரசுக்கு நல்ல வருமானம் மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

 

 

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொழில் துறை அமைச்சராக எப்படி பார்க்கிறீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு.

 

நான் சாதாரண மனிதனாக,தமிழனாக பார்க்கிறேன்.

 

அதில் பார்க்க கூடிய அளவில் எதுவும் இல்லை, பட்ஜெட்டில் வெறும் குப்பை தான் இருக்கிறது என பதிலளித்தார்.

 

அமைச்சர் டி ஆர் பி ராஜா மேடைப் பேச்சு.

 

நாட்டை வலிமைப்படுத்த அதிக சக்தி வாய்ந்த என்ஜின் ஆக தமிழ்நாடு திகழ்கிறது.

 

1100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்,மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்குகிறது.

 

மூன்றாவது முறையாக இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரக நாட்டு உடனான இது போன்ற சந்திப்பு நடைபெறுகிறது.

 

இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த காலணிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளது.

 

1800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு இடையேயான வணிகம் தென் இந்தியாவில் இருந்து தொடங்கி உள்ளது.

 

தமிழகத்தில் இருந்து 30% சதவீத எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

நிறைய புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி வருகின்றனர்.

 

இந்த மாநாட்டின் மூலம் நிறைய நல்ல முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

தமிழ்நாடு திறமை,அறிவின் தலைநகரமாக விளங்குகிறது.

 

தொழில் தொடங்க தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது.

 

வேளாண் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் தமிழகம், மதிப்பு கூட்ட பொருட்களாக மாற்றுவதில்லை என்றார்.

 

மேலும் யுஏஇவில் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது என்றார்.

 

ஐக்கிய அரபு அமீரக பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா மேடைப் பேச்சு.

 

 

நான் இந்திய மண்ணிற்கு தனிப்பட்ட முறையிலும், எங்கள் நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் ரீதியாகவும் வருகை புரிந்துள்ளேன்.

 

இன்று காலை தமிழ்நாடு அமைச்சர் மா சுப்ரமணியன் உடன் ஹெல்த் வாக் சென்றேன்.

 

இந்திய சமூகமும், ஐக்கிய அரபு நாட்டின் சமூகமும் இரு நாடுகளிலும் இருந்து வருகின்றன.

 

கடந்த 2022 எங்களுக்கு ஒரு பெரிய வருடமாக அமைந்தது. இப்போது 15 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது..

 

2 வருடங்களுக்கு முன்பு 50 பில்லியன் டாலர்களாக இருந்த எங்களின் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பு, இந்தியாவுடனான சில ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் பிறகு, தற்போது 70 பில்லியனாக உயர்ந்துள்ளது.

 

எண்ணெய் வர்த்தகம் இன்றி நாட்டின் GDP ல் முதல்முறையாக  74 சதவீதம் வளர்ச்சி பங்களிப்பை மற்ற தொழில் வர்த்தகம் வழங்கி உள்ளது.

 

Tags:
#TRB Raja  # Budget 2024  # Trash  # Press Meet  # UAE Economy Minister Abdulla bin Touq Al Marri 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos