தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு
காவிரி பிரச்னை, பட்ஜெட் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
காவிரி நீர் உரிமை கோரி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.
டெல்டா பகுதிக்கு காவிரி உரிமையை மத்திய அரசு வஞ்சித்து வருவது தொடர் கதையாக உள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் தமிழ்நாடு என்கிற பெயர், தமிழ் மக்களின் உரிமை, வெள்ள நிவாரணம் என எதுவும் இடம்பெறவில்லை.
மாறாக, குறிப்பிட்ட வட மாநிலங்களுக்கு மட்டுமே வெள்ள நிவாரண நிதியாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, வஞ்சிக்கப்படுகிற தமிழ்நாட்டுக்கு வாழ்வளிக்கும் விதமாக நமது உரிமைப் போர் முழக்கம் வர வேண்டிய நேரத்தில் வரும்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முடிவு எடுப்போம்.
தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் விரைவில் தொடங்கும் என்றார் வீரமணி.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மதிமுக கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:
#K Veeramani
# Budget 2024
# Nirmala Sitharaman