ஓர் அற்புதமான பழம், கொய்யாப்பழம்!
கொய்யாப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான பழம்.
வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தோடு, கண் பார்வை கூர்மையாக்கவும் உதவும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
கொய்யா பழம் சாப்பிடுவது நல்லது.
நார்ச்சத்து மிக அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.
நன்மைகள்
இனிப்பு சுவை இருந்தாலும் கொய்யா குறைந்த கிளைசமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
நீரிவு நோயாளுக்கு கொய்யாப்பழம் சிறந்த தேர்வாக இருக்கும்.
கொய்யாவில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பழம்.
நார்ச்சத்து, வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், அதிகமாக உணவு உட்கொள்வதை தவிர்க்கலாம்.
மேலும், கொய்யா உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரிக்க உதவுகிறது
மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான விட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6 கொய்யாவில் உள்ளது.
இதனால், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுவதோடு, நரம்புகளை தளர்த்தி மூளை சேர்வடையாமல் இருக்க உதவும்.
வைட்டமின் ஏ சத்து நிரைந்த கொய்யாப் பழம் கண் பார்வையை கூர்மையாக்குவதோடு, கண்புரை ஏற்படுவதையும் தடுக்கிறது.
கொய்யாவில் நிறைந்துள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் ஃபிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.
எனவே சரும சுருக்கங்கள் நீங்கி இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது.
பொலிவான தோற்றம் பெற கொய்யாப்பழம் அவசியம் இருக்கட்டும்.
கொய்யாவில் உள்ள விட்டமின் சி நிறைந்துள்ளதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நார்சத்து நிறைந்த கொய்யாப்பழம் உடலிலுள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு குறைவதால் இதய நோய்கள் மாரடைப்பு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பைல்ஸ் என்னும் மூல நோயை குணப்படுத்த, மலச்சிக்கலை குணப்படுத்துவது அவசியம்.
எனவே, நார் சத்து நிறைந்த கொய்யா சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் மலச்சிக்கலுக்கான தீர்வு கிடைப்பதோடும் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
Tags:
#Guava
# Health Tips
# கொய்யாப்பழம்