நோய் எதிர்ப்பு சக்தி...
நோயை எதிர்க்கும் ஆற்றல் மிக்க நோய் எதிர்ப்பு சக்தி தரும் சில விசயங்களை இதோ....
துளசி
இது சாதாரணமாக தினமும் சாப்பிட்டு வந்தாலே உடல் எப்பொழுதும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் நல்ல ஆரோக்கியத் துடனும் பொழிவுடனும் காணப்படும்.
எனவே துளசி இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 இலையை மென்று சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி நோயை வரவிடாமல் தடுக்கும்.
ஓமவல்லி
சளிக்காக கொடுக்கப்படும் மருந்துதான் இது.
இந்த மூலிகையின் இலை தடித்து காணப்படும்.
இலையை அழுத்தினாலே சாறு வரும்.
இந்த இலை 2 ஐ பறித்து கழுவி விட்டு அப்படியே வாயில் போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கவும்.
இதன் மூலமாக உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு நோய் தாக்காமல் தடுக்கும்..
புதினா
வீட்டு சமையலில் மணத்திற்காக பயன்படுத்தப் படும் தழை.
இது மணத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படுவதில்லை.
மாமிச உணவுகளில் உள்ள கிருமிகளை அழிக்கவே இந்த இலை சமையலில் பயன்படுத்தப் படுகிறது.
இதனை சட்னி வைத்தும் சாப்பிடலாம்.
அல்லது டீ பிரியர்கள் டீ கொதிக்கும் போது ஒரு கொத்து புதினா இலையை டீயில் போட்டு வேகவைத்து வடி கட்டியும் குடித்து வரலாம்.
இதுவும் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
இஞ்சி
அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப் படும் பொருள் இஞ்சி.
இதன் காரணமாகத்தான் எந்த நோயும் நம் பகுதியில் தீவிரம் காட்ட இயலவில்லை.
இருந்தாலும் உணவில் அதிகம் இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
சுக்கு காஃபி, இஞ்சி டீ என எப்படி வேண்டு மானாலும் பயன்படுத்தலாம்.
நல்ல எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருள் இஞ்சி.
பூண்டு
பெரும்பாலும் சைவ வழிமுறையில் இருக்கும் நபர்கள் பூண்டை பயன்படுத்த மாட்டார்கள்.
காரணம் அதன் மணம்.
பூண்டும் வெங்காயமும் வாயில் மணத்தை ஏற்படுத்தி பிறரை முகம் சுழிக்க வைக்கும்.
எனவே அவர்கள் மட்டும் இதனை மருந்தாக பயன்படுத்திக் கொள்வது நலம்.
பூண்டுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் இன்றும் முதலிடத்தில் உள்ளது.
எனவே பூண்டை அதிகமாக உணவில் சேர்த்து வரவும்.
அதிமதுரம்
இனிப்பு சுவை கொண்ட இந்த மருந்து உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.
தற்போது சீனாவில் இதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை டீயில் போட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
மணமாகவும் இருக்கும்.
நல்ல சுவையாகவும் இருக்கும்.
Tags:
#Immunity
# துளசி
# ஓமவல்லி
# புதினா
# இஞ்சி
# பூண்டு
# அதிமதுரம்
# Health Tips