என்.டி.ஏ. கூட்டணி தலைவராகப் பிரதமர் மோடி தேர்வு..
பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கினர்.தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA - என்டிஏ) தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நாளை மறுநாள் (07.06.2024) நடைபெற உள்ளது. அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பார்கள். அதன் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
#என்.டி.ஏ
# பிரதமர் மோடி
# Prime Minister
# Modi
# NDA