சனி பகவானின் பாதிப்பு! விடுபடுவது எப்படி?
சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணிய வினைகள் குறித்து பார்க்கலாம். முன்னோர்களின் பாவ புண்ணியத்தில் நமக்கும் பங்கு உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி? நாம் முன் ஜன்மத்தில் செய்த பாவ புண்ணிய வினைகளையும், நம் முன்னோர் செய்த பாவ புண்ணிய செயலுக்கு ஏற்ப இந்த ஜன்மத்தில் நாம் இன்ப, துன்பங்களாக அனுபவிக்கிறோம்.
முன்னோர்களின் நகல்களே நாம் அவர்களின் சொத்தில் நமக்கு மட்டும் உரிமை இல்லாமல் நமது வாரிசுகளுக்கும் உரிமை உள்ளதைப் போன்று அவர்களின் பாவபுண்ணியத்தில் நமக்கும்,நமது வாரிசுகளுக்கும் பங்கு உண்டு.
இதை கர்மா என்கிறோம். இதை கண்காணிக்கவும் , பாரபட்சம் இன்றி செயல் படுத்தவும் 7 1/2 சனியாகவும், (மங்கு சனி, பொங்கு சனி, மரண சனி), அட்டம சனியாகவும், கண்ட சனியாகவும், அர்தாஷ்டம சனியாகவும் வலம் வந்து தசாபுத்திக்கு ஏற்ப தனது கடமையை கர்மகாரணான சனி செவ்வனே செய்து வருகிறார்.
எப்படி துன்ப கர்மாவை குறைப்பது?
1) எறும்புக்கு உணவு
2) பசுவுக்கு உணவு
3) நாட்டு நாய்க்கு உணவு
4) காகத்திற்கு உணவு
5) ஊனமுற்றோருக்கு உணவு
உங்களால் முடிந்த அளவு (எறும்புக்காவது) தொடர்ந்து உணவு அளித்து வந்தால் நமது பாவ சுமை படிப்படியாக குறைந்து நல்ல நிலமை அடைவது கண்கூடு.
இறை வழிபாடு: ஆஞ்சினேயர், தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்தும் அனுமன் காயத்ரி மந்திரம், அனுமன் சாலீசா, காலபைரவர் காயத்ரி போன்ற மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் கெடு பலனை குறைக்கலாம்.
மந்திரம் ஜெபிப்பதால் என்ன நிகழும்?
நாம் இப்போது படும் பெரும்பாலான துன்பங்களுக்கு நாம் முன்பு எடுத்த தவறான முடிவுகளே காரணம். தெளிவான மனநிலையில் நாம் தவறான முடிவை எடுக்க மாட்டோம். மந்திரங்களின் அதிர்வலைகளால் நமது மனம் கலக்கம் இன்றி தெளிவாக இருந்து நமக்கு மனோ தைரியத்தை அளிப்பதால் நாம் நமது பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொள்ளவும், புதிய பிரச்சனை வாராமல் காத்துக் கொள்ளவும் முடியும்.
சித்தர் வழிபாடு:
பரிபூர்ணமாக சித்தர் பெருமகான்களிடம் சரண் அடைந்து ஜீவசமாதிகளுக்கு தொடர்ந்து சென்று வர வேண்டும். ஜீவசமாதிகளில் குறைந்தது 2 1/2 மணி நேரம் நாம் அங்கு இருக்க வேண்டும்...! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
#சனி பகவானின் பாதிப்பு
#