3 ஆண்டுகளில் 2,226 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது- மு.க.ஸ்டாலின்

3 ஆண்டுகளில் 2,226 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது- மு.க.ஸ்டாலின்
By: No Source Posted On: October 21, 2024 View: 1721

3 ஆண்டுகளில் 2,226 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது- மு.க.ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் சீர்வரிசை பொருட்கள் வழங்கி 31 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது:

 

* 31 இணைகளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்துவதில் பெருமை, மகிழ்ச்சி அடைகிறோம்.

* ஆட்சிக்கு வந்த பின்னர் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது அறநிலையத்துறையில் தான்.

* அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்.

* அறநிலையத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திமுக அரசு செயல்படுகிறது.

* பெண்களுக்கு உரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.

* கடந்த 3 ஆண்டுகளில் 2,226 திருக்கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் 10,208 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

* திருக்கோவில்களுக்கு சொந்தமான 7000 ஏக்கர் நிலங்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.

* 10,638 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* திமுக அரசு பொறுப்பேற்ற பின் கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

* திருக்கோவில்களில் நன்கொடையாளர்கள் அளித்த ரூ.1,103 கோடி நிதி மூலம் கோவில்களில் 9,123 பணிகள் நடைபெறுகின்றன.

* கோவில்கள் தொடர்பான வழக்குகளை அறநிலையத்துறை சிறப்பாக கையாண்டு சிறந்த தீர்ப்புகளை பெற்று வருகிறது.

* திருக்கோவில்களில் தமிழில் குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் நமக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

* 9 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

* பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துவோரால் அரசின் பணிகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

* நமது சாதனைகளை தடுக்கத்தான் பல வழக்குகள் போடப்படுகிறது. அதனை சட்டப்படியே முறியடிக்கிறோம்.

* ஒவ்வொரு வழக்குகளிலும் அமைச்சர் சேகர்பாபு வென்றெடுக்கும்போதும் சரியான அமைச்சரைத்தான் தேர்வு செய்துள்ளோம் என மகிழ்ச்சி.

* திமுக ஆட்சியில் அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.

* அனைத்து மதங்களையும் பாகுபாடின்றி நடத்துவதால் தான் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று கூறினார்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos