தங்க புதையலா? சதுரங்க வேட்டை பாணியில்!
செங்கம் அருகே இரண்டரை கிலோ போலி தங்க நகை 36 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற ஆறு பேர் கொண்ட கும்பல் கைது வாங்க வந்த இருவர் தப்பி ஓட்டம்.
செங்கத்தை அடுத்த முறையார் பகுதியில் விழுப்புரம் மாவட்டம் அம்மன் குப்பம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் 62 என்பவர் இரண்டரை கிலோ போலி தங்க பொட்டு காசு 36 லட்ச ரூபாய்க்கு ஏமாற்றி விற்கப் போவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இவர்களை மடக்கி பிடிக்க செங்கம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில்தனி பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு முறையார் பகுதியை சுற்றி வளைத்து கண்காணித்து காத்து வந்தனர்.
அப்போது குடும்பத்துடன் வெளியூர் செல்வது போல் முறையார் பகுதியில் வந்து நின்ற ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கி தர்மலிங்கம் சுற்றி வளைத்து பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அருகில் இருசக்கர வாகனம் வந்து நின்றது அதில் நகையை வாங்க சென்னையில் இருந்து வந்த கமல் ராம்குமார் இருவரும் இறங்கி தர்மலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்த போது இதனை கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் திடீரென சுத்திவளைத்தனர்.
இதில் சுதாரித்துக் கொண்ட கமல் ராம்குமார் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.
இதில் தர்மலிங்கம் உட்பட காரில் இருந்த ஐந்து பேரையும் சேர்த்து காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் மிகுந்த இரண்டு கிலோ போலி தங்க பொட்டு காசையும் பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஈச்சமும் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தர்மலிங்கம் தனது நிலத்தில் கிணறு தோன்றிய போது புதையல் கிடைத்ததாகவும் அதில் 400 கிராம் தங்க காசுகள் உள்ளதாகவும் அதனை ஏமாற்றி நான்கு லட்ச ரூபாய்க்கு போலி தங்க காசுகளை விற்று சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலி தங்க காசு வாங்கிய ஏமார்ந்த கும்பல் இன்று மற்றொருவரை தர்மலிங்கம் தங்க பொட்டு காசு உள்ளதாக கூறி அதனை 36 லட்ச ரூபாய்க்கு விலை பேசி உள்ளதை தெரிந்து கொண்ட அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளது.
அந்த ரகசியின் தகவலின் பெயரில் தனிப்பிரிவு அமைத்து தொடர்ந்து இதுபோன்று தாங்கள் கிணறு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கிணறு வெட்டும் பொழுது தங்களுக்கு புதையல் கிடைத்துள்ளதாகவும் அந்த புதையலில் தங்க காசுகள் தங்க போட்டு காசுகள் தங்க ஆபரணங்கள் விலைமதிக்க முடியாத பொருட்கள் உள்ளதாக பல போலி நகைகள் வாங்கும் கும்பலிடம் பேரம் பேசி அவர்களிடம் தரத்தை பரிசோதிக்க உண்மையான தங்க நாணயங்களை தந்தும் பரிசோதனை செய்த பின்பு போலி தங்க நகைகளை தந்து பணத்தை வாங்கிக் கொண்டு தெரியல தலைமறைவாகி விடுவதும் என தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருசக்கர வாகனத்தில் சென்னையைச் சேர்ந்த கமல் ராம்குமார் இருவரும் வந்து நின்றவுடன் எதிரே ஸ்கார்பியோ கார் ஒன்று வந்து நின்றது அதில் தர்மலிங்கம் இறங்கி கமல் ராம்குமார் இடம் பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென காவல்துறையினர் சுத்தி வளைத்தனர் எதிர்பாராத விதமாக கமல் ராம்குமார் காவல்துறையினர் சிக்காமல் இருசக்கர வாகனத்தில் தப்பி பறந்து சென்றனர்.
தர்மலிங்கம் மற்றும் காரையும் பிடித்த போலீசார் காரில் இருந்த தர்மலிங்கம் மகன் வெங்கடேசன் அருள்முருகன் சத்யராஜ் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகவல்லி கணவர் சுரேஷ் என்பவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த இரண்டரை பவுன் போலி தங்க பொட்டு காசு இவர்கள் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:
#திருவண்ணாமலை மாவட்டம்
# காவல்துறை
#