விஜய் கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. மாநாட்டு முன்னேற்பாடுகள் பற்றி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.
இதுபற்றி மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அடுத்த மாதம் 27- ந்தேதி விக்கிரவாண்டி வி சாலை என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மாநாடு முன்னேற்பாடுகள் பற்றி கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.
கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தவறாமல் பங்கேற்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பங்கேற்போரின் எண்ணிக்கை வாகனங்களின் எண்ணிக்கை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.