மக்கள் நீதி மய்ய கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர். தங்கவேலு, தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் தணிகைவேலு, விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஆர்.பி. ஸ்ரீபதி, மீனவர் அணி செயலாளர் ஆர்.பிரதீப் குமார், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 1000 பேர் கலந்து கொண்டனர்.