பிகில் படத்தின் வழக்கு! இயக்குநர் அட்லீ பதில் அளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்

பிகில் படத்தின் வழக்கு! இயக்குநர் அட்லீ பதில் அளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்
By: No Source Posted On: September 04, 2024 View: 37

பிகில் படத்தின் வழக்கு! இயக்குநர் அட்லீ பதில் அளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்

நடிகர் விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். இதனை இயக்குநர் அட்லீ இயக்கி இருந்தார்.

 

இந்தப் படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

 

பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

 

பிகில் படத்தின் கதையை தன்னுடையது என்றும், தனது கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்ச ரூபாய் வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கு தொடர்ந்து இருந்தார்.

 

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய் நடித்த பிகில் படக்கதை திருட்டு தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

 

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தனது கதை என அம்ஜத் மீரான் 2019-ல் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Tags:
#atlee  # bigil  # thalapathy vijay  # chennai high court  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos