முகத்தில் முடி வளருகிறதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
முகத்தில் முடி வளர்வது இயற்கையானது என்றாலும் பெண்கள் அவற்றை விரும்புவது இல்லை.
இதற்காக சந்தையில் விற்கப்படும் பல கிரீம்கள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் நிரந்தரமான தீர்வு என்பது கேள்விக்குறியே ஆகும்.
இப்படி முகத்தில் வளரும் முடிகளை இயற்கையான பொருட்களை கொண்டு நிரந்தரமாக அகற்றலாம்.
கடலை மாவு
முகப்பொழிவுக்காக பெரும்பாலும் கடலை மாவை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் முடி வளர்ச்சியை தடுக்கும் எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் உள்ளது.
2ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2ஸ்பூன் ரோஸ்வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மறையும்.
சோளமாவு
சோளமாவுடன், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சிறிதளவு சர்க்கரை கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து,
முகத்தில் முடி உள்ள இடத்தில் மாஸ்க் போல் அப்ளை செய்து பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால், முடிகள் நீங்கும்.
சர்க்கரை
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் முடிகளை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கு 1ஸ்பூன் தேனுடன், 2ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன்,
முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முற்றிலுமாக மறையும்.
பப்பாளி
பப்பாளி பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறுதுண்டுகளாள நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
சுமார் 20நிமிடங்கள் கழித்து கழுவினால் முடிகள் நீங்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால், முடிகள் நீங்குவதோடு, சருமம் பளபளப்பாக மாறும்.
Tags:
#Facial Hair
# Health Tips
# முகத்தில் முடி வளர்வது