மார்பக புற்றுநோய்... தடுக்கும் வழிமுறைகளும்..!
மார்பக புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்:
பல வகையான புற்றுநோய்களைப் போலவே, மார்பக புற்றுநோய்க்கான காரணமும் இன்னும் தெளிவாகவில்லை.
மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை புற்றுநோய் வரக் காரணமாகின்றன என்பது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
கூந்தல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சில அழகுசாதனப் பொருட்கள், சில டியோடரண்டுகள் ஆகியவற்றில் கலக்கப்படும் ஆபத்தான இரசாயனங்கள் இதற்கு காரணம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அறிகுறிகள்
மார்பக புற்றுநோயை அதன் ஆரம்ப அறிகுறிகளால் அடையாளம் காண முடியும்.
புற்று நோய் பாதிப்பின் முதல் அல்லது இரண்டாவது கட்டத்தில் கண்டறியப்பட்டால்,
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சரியான நேரத்தில் அளிக்கப்படும் சரியான சிகிச்சையின் உதவியுடன், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
மார்பகத்தில் கட்டி
மார்பகம், மார்பகத்தைச் சுற்றியுள்ள பகுதியிலோ அல்லது அக்குள் பகுதியிலோ கட்டி இருப்பதை உணர்ந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
எல்லா கட்டியும் புற்றுநோய் இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் மார்பகத்தில் கட்டி இருந்தால் அதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
புற்றுநோய் கட்டிகள் பொதுவாக வலியை கொடுக்கக் கூடியது அல்ல என்றாலும்,அவை வளரும்போது வலியை உணரலாம்.
மார்பகம் அல்லது முலைக்காம்பு வடிவத்தில் மாற்றம்
இரண்டு மார்பகங்களின் அளவிலும் சிறிது வித்தியாசம் இருப்பது இயல்பு தான்.
ஆனால் மார்பகத்தில் அளவு அல்லது வடிவமைப்பில் அசாதாரண மாற்றம் தோன்றினால், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இது தவிர, மார்பகம் சிவத்தல், மார்பகத்தில் அரிப்பு போன்றவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
அதே போன்று முலைக்காம்பு உள்நோக்கி இருந்தாலோ, அதன் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தாலோ, அலட்சியமாக இருக்கக்கூடாது.
முலைகாம்புகளின் இருந்து பால் அல்லது திரவம் கசிதல்
குழந்தை பிறந்த பிறகு, முலைக்காம்புகளில் இருந்து பால் வெளியேறுவது இயல்பு.
ஆனால், மற்ற பெண்களுக்கு முலைக்காம்புகளில் இருந்து பால் கசிவு இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சில சமயங்களில் முலைக்காம்பிலிருந்து ரத்தம் கசியும்.
பிற வண்ண திரவங்களும் சில சமயங்களில் கசியலாம்.
இத்தகைய அறிகுறிகள் புற்றுநோயின் அறிகுறியாகக் கருதப்படுகின்றன.
எனவே உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Tags:
#Breast Cancer
# Breast Pain
# Health Tips