
பொற்கொடி உருக்கமான வேண்டுகோள்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வேணுகோபால் பெருமாள் தெருவில் கட்டி வரும் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆயுதங்களை போலீஸாருக்கு காட்ட சென்ற போது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.
அப்போது போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்தனர்.
இதில் அவர் இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கையாக நடந்து வருகிறது.
திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
தலைமறைவாக இருக்கும் அஞ்சலையை பிடித்து விசாரிக்க போலீஸார் முயற்சித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை ஆம்ஸ்ட்ராங் இறந்த 16ஆவது நாள் காரியம் நிகழ்ந்தது.
அன்றைய தினம் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியை தமிழகத்தில் தெரிய வைத்த பெருமை ஆம்ஸ்ட்ராங்கிற்கு உண்டு.
இதனால் அவரை போன்ற ஒரு பிரபலத்தைத்தான் மாநிலத் தலைவர் பதவிக்கு மாயாவதி நியமிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
பா.ரஞ்சித் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
ஆனால் அவரோ தனக்கு விருப்பம் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அது போல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரும் வழக்கறிஞர் ஆவார்.
தன்னை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பிஏ பிஎல் என அழைப்பதற்கு பதிலாக திருமதி ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது கணவர் ஆம்ஸ்ட்ராங்கையும் அவரது படுகொலையையும் நினைவூட்டவே இது போன்று அவர் பெயர் மாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:
#திருமதி ஆம்ஸ்ட்ராங்
# Armstrong
# BSP
# Porkodi Armstrong
#