அத்திப்பழத்தின் அதிசயம்!

அத்திப்பழத்தின் அதிசயம்!
By: No Source Posted On: July 22, 2024 View: 268

அத்திப்பழத்தின் அதிசயம்!

 


அத்திப்பழத்தை பொறுத்தவரை, வைட்டமின் C, A, K, E, இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும் அற்புத பழமாகும்.

 

உடம்பில் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அத்திப்பழம் கை கொடுத்து உதவக்கூடியது.

 

தினமும் 5 அத்திப்பழத்தினை இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பழத்தையும், அந்த தண்ணீரை குடித்து வந்தாலே ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்துவிடும்.

 

 

ரத்த உற்பத்தியும் அதிகமாகும் பெருகும்.

 

எலும்புகள்:

 

அத்திப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.

 

வாதம், பித்தம்: உடலிலுள்ள வாதம், பித்தத்தை போக்க அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும்.

 

குடல் தொற்று, ஆசனவாய் வெடிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளையும் சேர்த்து தீர்க்கிறது இந்த அத்திப்பழம்.

 

முக சுருக்கங்கள்:

 

இந்த பழம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தூண்டுகின்றன.

 

இதனால் சுருக்கங்களை குறைத்து, சருமத்திற்கு பளபளப்பை அதிகப்படுத்துகின்றன.

 

பாலியல் நோய்களை போக்கவும், ஆண்மை குறைபாடுகளை போக்கவும் இந்த அத்திப்பழம் உதவுகிறது.

 

உடல் பலவீனத்தை குறைத்து, நரம்புகளை பலப்படுத்த அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதுமாம்..

 

 

கால்சியம் குறைபாடுகள்:

 

உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த தினமும் 3 அத்திப்பழங்களையாவது சாப்பிட்டு வரவேண்டும்.

 

காரணம், ரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான எலக்ட்ரோலைட்டுகள் இதில் நிறையவே அடங்கியிருக்கின்றன.

 

அதேபோல, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த தன்மை அத்திப்பழத்துக்கு உள்ளது என்பதால், சர்க்கரை நோயாளிகள், அத்திப்பழத்தைவிட, அத்திக்காயை தேர்ந்தெடுத்து பொரியல் செய்து சாப்பிடலாம்.

 

கால்சியம் குறைபாடுகளை போக்கக்கூடியது அத்திப்பழம்.

 

உலர் அத்திப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்கின்றன.

 

இதனால், மூட்டு வலி, முதுகு வலி, முழங்கால் வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

 

 


பாலியல் குறைபாடுகள்:

 

தினமும் இரவில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

 

அல்லது இரவு தூங்கும் முன் பாலில் இதை கலந்து குடித்தாலும் பலன் கிடைக்குமாம்.

 

தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்திருப்பவர்களும், இரவு நேரத்தில் 2, 3 அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு வந்தால், பாலுணர்வு அதிகரிக்க செய்யும் என்கிறார்கள்..

Tags:
#அத்திப்பழம்  # Fig  # Health Tips 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos