தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குரலில் பேச வேண்டும் -- திருமுருகன் காந்தி கோரிக்கை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போதுபேசிய அவர், காவிரி நீரை தர மாட்டோம், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட மாட்டோம் என கர்நாடக காங்கிரஸ் அரசு கொக்கரித்திருக்கிறது.
இது முழுக்க முழுக்க கன்னட விரோத ன, உழவர் விரோத கன்னட வெறி அரசியல்.
காவிரி போதுமான தண்ணீரை கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பெங்களூருவில் செயற்கையாக தண்ணீர் பஞ்சத்தை உருவாக்கினர்.
இப்போது அங்கு போதுமான மழை பெய்தாலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.
தொடர்ந்து தமிழக விரோத அரசியலை வைத்து தான் கர்நாடக அரசு அரசியல் செய்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
காவிரியில் கை வைப்பதன் மூலமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை கர்நாடக அரசு சிதைத்து வருகிறது.
சென்னை உள்பட பல நகரங்கள் காவிரி நீரை நம்பி தான் குடிநீர் தேவை நிறைவேற்றி வருகிறது.
எனவே காவிரி நீர் டெல்டா மாவட்டத்திற்கு மட்டும்தான் என பிற பகுதிகளில் ஆளுகின்ற தமிழர்கள் நினைத்தால் அது தமிழ்நாட்டின் உரிமையை நாமே விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்.
காவிரியில் தண்ணீர் கொடுக்க மறுப்பது மற்றும் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு வெற்றி பெற்று விட்டால் நாளை இதே நிலை முல்லைப் பெரியாறில் வரும், தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய ஆறுகளில் பவானி ஆற்றில் இதேபோன்று நெருக்கடி ஆந்திரா உருவாக்கும்.
எனவே கர்நாடகா, ஆந்திரா, கேரளா என தமிழகத்திற்கு உரிய நீரை வஞ்சிக்க கூடிய நிலை ஏற்படும்.
அதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் காவிரி நீருக்கு கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டத்தில் அடங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் இவர்கள் தங்களுக்குள் இருக்கிற கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஒரே குரலோடு பேச வேண்டும்.
தேர்தல் சமயத்தில் அவர்கள் எதிர் எதிர் அரசியலில் பேசலாம். ஆனால் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதில் அதிமுக, திமுக ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்.
நாங்களும் எங்கள் அமைப்புகளோடு தமிழகத்தின் உரிமையை மீட்க களமிறங்க தயாராகி வருகிறோம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எங்களுடைய அமைப்புகள் எங்களது வலிமைக்கு ஏற்றவாறு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறோம்.
மின் கட்டண உயர்வு என்பது தேவையற்றது.
இது மின்சார வாரியத்தின் நிர்வாக திறமையின்மை என்பதுதான் அதன் அடிப்படை காரணம்.
அந்த ஒழுங்கு முறை ஆணையத்திற்கு எதிராக இதுவரை எந்த கேள்விகளும் எழுப்பப்படவில்லை.
மின்சார வாரியத்தின் தலைமை அதிகாரியும், ஒழுங்குமுறை ஆணையமும் சேர்ந்து கொண்டு தனியார் கம்பெனிகளுக்கு சாதகமாக ஒப்பந்தங்களை போடுகிறார்கள்.
இது கடந்த அதிமுக ஆட்சிகளும் கேள்வி கேட்கவில்லை, தற்போது திமுக ஆட்சியிளும் கேள்வி கேட்காத நிலை இருப்பதால்தான் இந்த விலை ஏற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நஷ்டம் என்றுதான் விலை ஏற்றப்பட்டது.
தற்போது மீண்டும் நஷ்டம் என்று விலை ஏற்றுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
எனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
Tags:
#ThirumuruganGandhi
# Kaveri Issue
# TNEB
# PressMeet