பாம்பன் புதிய பாலம்!
பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் பாலம் திறக்கப்பட்டு ரயிலில் சேவை எப்போது தோன்றும் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்க கூடிய பாம்பன் ரயில்வே பழைய பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நூறு ஆண்டுக்கு மேல் ஆகிறது.
தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழைய பாலம் சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 535 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
புதிய ரயில்வே பாலத்தின் நடுவே படகுகள் மற்றும் கப்பல்கள் கடந்து செல்வதற்காக தானியங்கி தூக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தானியங்கி தூக்கப்படும் வீல்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காலில் சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்தாண்டோ அல்லது அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் திறக்கப்பட்டு ரயில் சேவை துவங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் இதே போல தான் சென்ற ஆண்டு அறிவித்திருந்தது ரயில்வே நிர்வாகம், ஆனால் திறக்கப்படவில்லை.
எப்போது திறக்கப்படுவது என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது
Tags:
#Pamban Bridge
# Railways
# பாம்பன் புதிய பாலம்