
எலும்பு, பற்களுக்கு உறுதி தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் அல்டிமேட்..
A, D, C, வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.
முக்கியமாக B6 வைட்டமின் அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
வைட்டமின் D உள்ளதால், நோய் எதிர்ப்ப மண்டலத்தை சீராக்குகிறது. எலும்பு, பற்களுக்கு உறுதி தருகிறது. வைட்டமின் A உள்ளதால், சிறந்த ஆகிஸிஜனேற்றியாக வினைபுரிகிறது.
இதனால் ஆபத்தான புற்றுநோய்களின் செல்களும் அழிக்கப்படுகின்றன.
உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
நரம்புகளின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.
ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.
வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்வதில் சர்க்கரைவள்ளி கிழங்குக்கு முக்கிய பங்குள்ளது. குளிர்காலங்களில் இந்த கிழங்கை சாப்பிடும்போது, சரும பொலிவு மேம்படுகிறது.
முக்கியமாக புற ஊதாகதிர்களின் பாதிப்பில் இருந்தும் சருமத்தை காக்க செய்கிறது.
மன அழுத்தம் பிரச்சனையிலிருந்து மீட்டுவரும் சக்தி இந்த சர்க்கரைவள்ளி கிழங்குக்கு உண்டு.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.
நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை.
அத்துடன் கொழுப்பை எரிக்கும் செயல்முறையையும் துரிதப்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளும் இதனை அளவாக சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்காது.
உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் உடலுக்கு சக்தியை தருகிறது.
அதனால்தான், இதனை "சர்க்கரை கொல்லிக்கிழங்கு" என்கிறார்கள்.
எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள், இதை அளவோடு எடுத்து கொள்ளலாம்.
மூட்டு வலி, சுவாச பிரச்சினை, மூட்டுவலி தொந்தரவு, வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த மருந்தாகும்.
பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அதேசமயம், இந்த கிழங்கை அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வாழைப்பழங்களில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறதாம்.
இதனால், மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளதாம்.
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறு, வயிறு உபாதைகள் போன்றவையும் ஏற்படலாம்.
Tags:
#Sweet Potato
# சர்க்கரை வள்ளிக்கிழங்கு
# Health Tips