இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
By: No Source Posted On: July 13, 2024 View: 508

இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

 

இலவங்கப்பட்டை நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடியது. அவற்றின் சுவையும் மனமும் நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதனை பயன்படுத்தி டீ போடுவார்கள்.

 

பொதுவாக அனைவருக்குமே டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.

 

எனவே அந்த வகையில் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய இலவங்கப்பட்டை டீயின் நன்மைகளை பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

 

இலவங்கப்பட்டை டீ தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய், நீரிழிவு நோய் தடுக்கிறது.

 

உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் அளவிற்கு உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

 

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

 

இதயநோய் வருவதற்கு முக்கிய காரணம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதே.

 

எனவே உடலில் கொலஸ்ட்ராலின் அளவை சரியான அளவில் வைத்துக்கொள்ள இலவங்கப்பட்டை உதவுகிறது.

 

மாதவிடாய் வலியை போக்குகிறது, இந்த டீ குடிப்பதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வாந்தி, வயிற்று வலி, குமட்டல், இரத்தப்போக்கு போன்றவற்றை குறைக்கிறது.

 

இலவங்கப்பட்டை டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது, இதனை அதிகமாக உட்கொள்ளுதல் கூடாது.

 

இதில் அதிக அளவில் கூமரின் உள்ளது. இது கல்லீரல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே இதனை அளவோடு உட்கொள்ளுதல் சிறந்தது.

 

இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் சருமம் பளப்பளப்பாக இருக்கும். இது சருமத்தில் உள்ள கொலாஜன் உருவாக்கத்தை தூண்டி சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்துகிறது.

 

முகம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மேலும் இது சருமத்தில் முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது என்று கூறப்படுகிறது.

 

இலவங்கைப்பட்டை டீ அருந்துவதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறைகிறது, உடலில் குளுக்கோஸ் உட்கொள்ளும் அளவையும் குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

 

இலவங்கப்பட்டை டீ குடிப்பதின் மூலம் உடலில் தொற்றுக்களை ஏற்படுத்தும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது, தொற்றுக்களை அளிப்பதில் ஒரு சிறந்த மூலப்பொருளாக இருக்கிறது....

Tags:
#Cinnamon Tea  # Health Tips  # Tea  # Cinnamon  # இலவங்கப்பட்டை டீ 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos