சசிகலா சுற்றுப் பயணம் - ஓ. பி. எஸ் முழு ஆதரவு

சசிகலா சுற்றுப் பயணம் - ஓ. பி. எஸ் முழு ஆதரவு
By: No Source Posted On: July 09, 2024 View: 4304

சசிகலா சுற்றுப் பயணம் - ஓ. பி. எஸ் முழு ஆதரவு

கட்சியை இணைப்பது தான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை. -ஓபிஎஸ் பேட்டி

 

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

 

பூரண மதுவிலக்கு குறித்த கேள்விக்கு:

 

பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தையும், விசாரித்தையும் ஒழிக்க முடியும் என்பது எனது கருத்து. அதை அரசு செய்ய வேண்டும்.

 

சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு:

 

ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மாண்புமிகு சின்னமாகவும் சந்திக்கிறார் அவரது முயற்சி வெற்றி பெறட்டும்.

 

90 சதவீத தொண்டர்களை சசிகலா இணைத்ததாக கூறியதை நான் வரவேற்கிறேன்.

 

சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு:

 

சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு கிடைக்கிறது. அதை சரிப்படுத்தக் கூடிய வழியை முதல்வர் செய்ய வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அடுத்த முறை ஆட்சிக்கு வருவது கேள்விக்குறியாகி படுதோல்வி அடைவார்.

 

புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் குறித்த கேள்விக்கு:

 

ஆங்கிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

 

ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவுக்கு உண்மையாக இருந்தது கிடையாது என்ற இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

 

நீண்ட விளக்கத்தை நேற்று அளித்திருக்கிறேன் கட்சி நன்மை தருகிறது இதற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாது. அவரைப் போல் நான் தெனாவட்டாகவோ, சர்வாதிகாரத்தோடு பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். கட்சியை இணைப்பது தான் ஒரே வழி.

 

இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை என்பது என்னுடைய கருத்து அல்லாமல் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தும் கூட.

 

மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று இபிஎஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:

 

என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்? பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கு:

 

இலைச் சின்னம் தேர்தலில் அங்கு போட்டியிடவில்லை. அதனால் இலை சின்னத்துடன் கூடிய மாங்கனி அங்கு போட்டியிடுகிறது என்று சொன்னேன், அதுதான் நடக்கப்போகிறது.

 

அதிமுகவில் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்விக்கு:

 

இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். உறுதியாக ஒரு தொண்டர் அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

Tags:
#AIADMK  # OPS  # EPS  # Sasikala  # Vikravandi By Election  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos