வெங்காயம் விலை கண்ணீர் வரவழைக்கிறது, மக்கள் தவித்து வருகின்றனர்..
இந்திய மக்களின் உணவில் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயம், விலை உயர்வு நாட்டின் மொத்த உணவு பணவீக்கத்தில் பாதிப்பை உண்டாகும்.
தற்போது வெங்காயம் விலை 60 முதல் - 90 ரூபாய் வரையிலும், தக்காளி விலை 40 முதல் ரூபாயில் - 80 ரூபாய் வரையிலும், உருளை கிழக்கு 50 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தாமல் வெங்காயம், தக்காளி, உருளை கிழக்கு ஆகியவற்றின் விலையே பெரிய அளவில் உயர்ந்துள்ளதால், மக்கள் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு, அரசு கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தின் சராசரி விலை கிலோ ரூ.16.93 ஆக இருந்தது. இந்த ஆண்டு, நேரடி பலன் (DBT) திட்டத்தின் மூலம் கிலோ ரூ.29.5 என்ற விலையில் மத்திய அரசு வெங்காயத்தை வாங்கி வருகிறது.
மேலும், இந்த நிதியாண்டில் மட்டும் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வாங்க மத்திய அரசு ரூ.1,500 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த ஆண்டு வெங்காயம் கொள்முதல் செய்வதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2023 ஆகஸ்ட் மாதத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலையும், உணவு பணவீக்கமும் 2023 ஆம் ஆண்டின் பெரும்பகுதியிலும் மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இருந்தது. இது பொதுத் தேர்தல் முன்பு வரையில் இருந்தது.
வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வெங்காயத்தின் ரீடைல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் நேரடி கொள்முதல் உதவியளித்தாலும் ரீடைல் சந்தையில் பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை.
இதேபோல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் அதிகப்படியான விலையில் விவசாயிகள் லாபம் அடைய முடியவில்லை, மக்கள் தவித்து வருகின்றனர்..
Tags:
#Onion
# வெங்காயம்
# விலை உயர்வு
# Modi
# Government