அனைத்து வயது பெண்களுக்கும் அரோகியத்தை மேம்படுத்தும்.! - எது தெரியுமா?

அனைத்து வயது பெண்களுக்கும் அரோகியத்தை மேம்படுத்தும்.! - எது தெரியுமா?
By: No Source Posted On: July 08, 2024 View: 765

அனைத்து வயது பெண்களுக்கும் அரோகியத்தை மேம்படுத்தும்.! - எது தெரியுமா?

உளுத்தங்களி.....


வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெரும்


கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்


பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.


உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.


நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன.


வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்


உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது


உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது


உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும்.


ஊட்ட உணவு


உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் திறனை கொடுக்கும்


உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும்.

உளுந்தங்களி செய்முறை :

கறுப்பு உளுந்து - கால் கப்

வெந்தயம் - 2 டீஸ்பூன்

பச்சரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்

கருப்பட்டி - முக்கால் கப்

நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்


கறுப்பு உளுந்து, வெந்தயம், அரிசியை இரண்டு முறை நன்கு கழுவி, பின்பு 2 கப் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

இதை மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.

கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி, கருப்பட்டி சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும்.

கருப்பட்டி நன்கு கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு கனமான கடாயில் வடிகட்டிய கருப்பட்டி கரைசலைச் சேர்த்துக் கொள்ளவும்.

அதில் நல்லெண்ணெய் மற்றும் அரைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

களி நன்கு கெட்டியாகவும் கடாயில் ஒட்டாமலும் வந்ததும் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி ஆறியதும் சாப்பிடவும்.

 

Tags:
#Health Tips  # உளுந்து களி  # வைட்டமின் B  # Vitamin B  # Urud Dhal 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos