
லண்டன் சென்று திரும்பிய மாணவர்கள் பரவச பேட்டி..!
நான் முதல்வன் நம் முதல்வரின் கனவுத் திட்டம். பாடப்புத்தகங்களைத் தாண்டி மாணவர்களின் திறன்களை வளர்க்கச் செய்வதும், அவர்களது உலகப்பார்வையை விரிவாக்கி வையத் தலைமை கொள்ளச் செய்வதுமே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் முன்னெடுப்பில் நான் முதல்வன் திட்டம் மவுனப் புரட்சி நடத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்று சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
15 பொறியியல் மாணவர்கள் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் என மொத்தம் 25 கல்லூரி மாணவர்கள் லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பயிற்சிகள் தரப்பட்டன.
லண்டனில் உள்ள நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வாரகாலம் திறன்மேம்பாட்டு பயிற்சிபெற்று வெற்றிகரமாக திரும்பி வந்தனர். தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பற்றி அவர்கள் கூறிய கருத்துக்கள் பரவச ரகம்.
நான் முதல்வன் திட்டம் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவர்களது பெற்றோரும் விரிவாக தெரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
Tags:
##naanmudhalvan #tnskilldevelopmentcorporation #tnschooleducation