.jpg)
ஹோலி பண்டிகை: மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஹோலி பண்டிகையை ஒட்டி இளைஞர்கள், இளம்பெண்கள்
ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி நடனமாடி மகிழ்ந்தனர்.
வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாளில் மகா விஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை
கொல்லும் முயற்சியில் அசுர குலத்தை சேர்ந்த ஹோலிகா நெருப்பில் எரிந்து
மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
அதன்படி, நேற்று ஹோலிகா தகனம் நிகழ்ச்சி வட மாநில மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மராட்டிய மாநிலம் வொர்லியில் ஹோலிகா உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இளைஞர்கள்,
இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி நடனமாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை ஒட்டி,
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும்
பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹோலி பணிடிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும்,
பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.