நிம்மதி மற்றும் மன அமைதி பெறுவதற்கான ஆலயவழிபாடு

நிம்மதி மற்றும் மன அமைதி பெறுவதற்கான ஆலயவழிபாடு
By: No Source Posted On: June 01, 2020 View: 1253

நிம்மதி மற்றும் மன அமைதி பெறுவதற்கான ஆலயவழிபாடு

 

அன்பர்களே, நாம் காணவிருப்பது, மனநிம்மதியை பெறுவதற்கான பரிகாரம் பற்றியதாகும்.


பணம், பொருள், குடும்பம் என எவ்வளவு இருந்தாலும், மன அமைதி இருந்தால்தான் அதை அனுபவிக்க முடியும். நிம்மதி இல்லாதவனுக்கு சொர்க்கத்தில் கூட சுகம் கிடைக்காது. மனநிம்மதியின்றி குழப்பத்தில் வாடித்தவிப்போரை ஆறுதல் படுத்தும் "சிவன்" "திருப்பூர்" அருகே "திருமுருகன்பூண்டியில்" இருக்கின்றார்.


முதலிலே ஜாதகரீதியாக யாருக்கெல்லாம் மனம் அமைதி அற்று காணப்படும். யாருடைய ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் பெறுகின்றதோ, யாருடைய ஜாதகத்திலே மனோகாரகன் என்று அழைக்கப்படும், சந்திரன் 6,8, 12-ல் மறைந்தால் அல்லது யாருடைய ஜாதகத்தில் சந்திரன் சர்ப்பங்களின் கால்கள் என்று வருணிக்கப்படுகின்ற ராகு, கேது இவர்களுடைய பாதசாரத்தில் இருக்கும்பொழுது அல்லது ராகு,கேது,சனி என்ற கடுமையான பாவிகளின் சேர்க்கை பெற்றிருக்கும்போது ஒருவருக்கு மனம் நிம்மதி அற்று காணப்படும்.


அந்த சூழ்நிலையிலே எந்தக் கோயிலுக்குச் சென்றால் மன நிம்மதி அடையும் என்பதையும் காண்போம். அவ்வாறு மன நிம்மதி வேண்டி இந்த திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயிலிலே வேண்ட பலன் கிடைக்கும். "சூரபத்மன்" எனும் அசுரன் ஆணவம் கொண்டு தேவர்களை சிறைபிடித்து துன்புறுத்தி வந்தான்.அவனது கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் தங்களை காக்கும்படி முருகனை வேண்டினார்கள்.


முருகப்பெருமான் அசுரனை "சம்ஹாரம்" செய்தார். அவர் தெய்வமாக இருந்தாலும் கூட, அசுரனைக் கொன்றதால், "வீரக்கத்தி தோஷம்" அவருக்கு பற்றியது. அதனால், அவர் என்ன செய்தார் என்றால், இந்த கோவிலுக்கு சென்று தன்னுடைய வேலை கோயில் வாசலிலே குத்தி நிலைநிறுத்தி, உள்ள சென்று தன் தந்தையான சிவபெருமானை வேண்டிவணங்கும் பொழுது, அவருடைய வீரக்கத்திதோஷம் விலகியது.


இந்தக் கோயிலின் மற்றொரு அம்சம் என்னவென்றால், "வேலும், மயிலும்" இல்லாமல் தனித்தன்மையோடு இருக்கும் முருகப்பெருமான் அழகாக காட்சியளிக்கின்றார். அவரையும் நீங்கள் வணங்கலாம்.


மன நோய்க்கு மருந்தாக இந்த ஸ்தலம் பிரதானமாக விளங்குகிறது.


"சித்தப்பிரமை", "மனக்குழப்பம்" உள்ள பக்தர்கள் இங்குள்ள "பிரம்ம தீர்த்தத்தில்" நீராடி தெளிவு பெறலாம்.

 

தாங்கள் செய்தது எப்பேற்பட்ட பாவங்களாக இருந்தாலும் இந்த 'சண்முக தீர்த்தத்தில்" நீராடி போக்கலாம். தமக்கு வேண்டிய ஆகைகளும் நிறைவேற "பால்குடம், காவடி" எடுத்து நேர்த்திகடனை செலுத்துகின்றார்கள். இப்படிப்பட்ட ஸ்தலங்களுக்கு நாம் செல்வதுதான் நம் அனைவருக்கும் பெருமையான ஒன்றாகும். இத்திருக்கோயில் திருமுருகன்பூண்டி திருத்தலமானது கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 5:30 மணி முதல் பகல் 12:45 மணிவரையிலும் மாலை 3:30 மணியிலிருந்து இரவு 8:15 மணிவரையிலும் திறந்திருக்கும்.


இப்பேற்பட்ட இத்தலத்திற்குச் சென்று நிறைவான மனநிம்மதி பெற வேண்டும்.

Tags:
#Peace  # tirupur temple  # Lord Murugan 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos