சொந்தக் காசில் சூனியம் வைத்துவிட்டார் மோடி..! பா.ஜ.க கூட்டணித் தலைவரின் ஒப்புதல் வாக்கு மூலம்..!

சொந்தக் காசில் சூனியம் வைத்துவிட்டார் மோடி..! பா.ஜ.க கூட்டணித் தலைவரின் ஒப்புதல் வாக்கு மூலம்..!
By: No Source Posted On: April 28, 2024 View: 2663

சொந்தக் காசில் சூனியம் வைத்துவிட்டார் மோடி..! பா.ஜ.க கூட்டணித் தலைவரின் ஒப்புதல் வாக்கு மூலம்..!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார் பா.ஜ.க கூட்டணிக் கட்சியான அஜித் பவார் முகாம் தலைவர் சகன் புஜ்பால். சகன் புஜ்பால் மகாராஷ்டிராவின் உணவுத்துறை அமைச்சர்.

நீங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று மோடியும், அமித் ஷாவும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தபோதும் ஆளை விடுங்கடா சாமி என்று சொல்லிவிட்டார் சகன் புஜ்பால்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் இருவருக்கும் பெரிய அளவில் அனுதாப அலை வீசுவதாகவும், இது அவர்களின் பேரணிகளில் தெரிவதாகவும் சகன் புஜ்பால் தற்போது NDTV க்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று மோடி முன்வைத்த கோஷம், சொந்தக் காசில் சூனியம் வைத்ததுபோல் மிகப்பெரிய நாசத்தை உருவாக்கிவிட்டது என்று அந்த பேட்டியில் புலம்பி இருக்கிறார் சகன் புஜ்பால். "400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவினர் வெற்றி பெற்றால், அரசியல் சாசனத்தை மாற்றிவிடுவார்கள் - இடஒதுக்கீட்டைப் பறித்துவிடுவார்கள்" என்று நாடெங்கும் உள்ள மக்கள் அச்சத்துடன் பேசிவருகிறார்கள் என்று உண்மையை ஒப்புக் கொள்கிறார் சகன் புஜ்பால்.

2019 மக்களவைத் தேர்தலில், ஒன்றுபட்ட சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மொத்தம் உள்ள 25 இடங்களில் 23 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக MP க்களை வாரிவழங்கிய இரண்டாவது மாநிலமாக மகாராஷ்டிரா இருந்தது. சகன் புஜ்பால் கூற்றுப்படி இப்போது மோடி சொந்தக் காசில் சூனியம் வைத்துவிட்டதால் அதிக தொகுதிகளை இழக்கும் மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா மாறிவிட்டது.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos