உடல் உறுப்புகளை பலப்படுத்த வேண்டுமா..? இதோ எளிய வழிகள்.!

 உடல் உறுப்புகளை பலப்படுத்த வேண்டுமா..? இதோ எளிய வழிகள்.!
By: No Source Posted On: April 22, 2024 View: 663

உடல் உறுப்புகளை பலப்படுத்த வேண்டுமா..? இதோ எளிய வழிகள்.!


கல்லீரல் - மண்ணீரல்


சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.


கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம்.


கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.


மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.


வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.


திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.


பிராக்கோலி கல்லீரல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிரக்கோலி கல்லீரலை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோயி லிருந்து காக்கிறது. எனவே இதை நீங்கள் பாதாம் பருப்பு, க்ரான்பெர்ரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் வினிகர் மற்றும் பூண்டுடன் வதக்கி சுவையாக சாப்பிடலாம்.


வெந்தயக் கீரை, கொத்தமல்லி, புதினா போன்ற கீரை வகைகளை உங்களுடைய தினசரி உணவுகளில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்


கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம். கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது

Tags:
#உடல் உறுப்பு  # Health tips 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos