கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..?

கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..?
By: No Source Posted On: August 17, 2023 View: 5829

கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..?

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.


கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.


அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.


உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து படிக்கவும்.


1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.


2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.


3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்.


4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.


5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.


6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.


7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.


8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.


9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.


10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.


11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.


12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.


13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

Tags:
#கோபம்  # angry 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos