76 சதவீத 2000 ரூ நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது - ரிசர்வ் வங்கி தகவல்

76 சதவீத 2000 ரூ நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது - ரிசர்வ் வங்கி தகவல்
By: No Source Posted On: July 03, 2023 View: 13036

76 சதவீத 2000 ரூ நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது - ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி அறிவித்தது.


அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.


இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:-


ஜூன் 30ம் தேதி வரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன.


இதில் 87 சதவீதம் டெபாசிட் மூலமாகவும், 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமாகவும் திரும்ப பெறப்பட்டுள்ளன.


மொத்தம் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன.


அடுத்த மூன்று மாதங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதுடன், கடைசிநேர பரபரப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:
# 2000 ரூ நோட்டுகள்  # ரிசர்வ் வங்கி   # 2000 Rs Notes  # Reserve Bank of India  # RBI  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos