எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை..! தமிழக முதல்வரின் 6 சூப்பர் யோசனைகள்..! Video
ஆக்கபூர்வமான அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்காக, திமுக தலைவர் திரு.M.K.ஸ்டாலின் 6 சூப்பர் யோசனைகளை முன்வைத்துள்ளார்.
1) குறிப்பிட்ட மாநிலத்தில் வலுவாக உள்ள கட்சியின் தலைமையின் கீழ், மாநில அளவிலான கூட்டணிகள் உருவாக்கப்பட வேண்டும்
2) கூட்டணிகளை உருவாக்க முடியாத மாநிலங்களில், இணக்கமான சீட் பகிர்வு ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.
3) மாநில அளவிலான கூட்டணி அல்லது சீட்-பகிர்வு சாத்தியமில்லாத மாநிலங்களில், பொது வேட்பாளர்களை களமிறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது தவறான முடிவாகும். நாம் எதிர்க்கும் அழிவு சக்தியின் பலத்தை அசட்டை செய்யக்கூடாது
5) ஒருமித்த எண்ணம் கொண்ட ஆக்கப்பூர்வ கட்சிகளுக்கு இடையே ஒரு 'பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம்' உருவாக்கப்பட வேண்டும்
6) அனைத்து ஆக்கபூர்வமான அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, ஒரு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும்
தமிழக முதல்வரின் இந்த 6 சூப்பர் யோசனைகளை நாடு முழுவதும் வைரலாக்க, ஆக்கபூர்வமான ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் என்று Progressive Media Forum கேட்டுக்கொள்கிறது.
Tags:
#mkstalin
# opposition
#