கணபதியின் வடிவங்கள் பற்றிய பதிவுகள்...

கணபதியின் வடிவங்கள் பற்றிய பதிவுகள்...
By: No Source Posted On: May 21, 2023 View: 1088

கணபதியின் வடிவங்கள் பற்றிய பதிவுகள்...

கணபதி பல முகங்களைக் கொண்டு அனைவருக்கும் காட்சி தருபவர். அனைவருக்கும் நல்லதை அருளும் விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம்.


பால கணபதி :

மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர்.


தருண கணபதி :

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடன் காட்சி தருபவர்.


பக்த கணபதி :

தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர்.


வீர கணபதி :

தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர்.


சக்தி கணபதி :

பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர்.


துவிஜ கணபதி :

இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர்.


சித்தி கணபதி :

பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியாக காட்சி தருபவர்.


விக்னராஜ கணபதி :

சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிறமேனியுடன் பிரகாசமாக விளங்குபவர்.


ரேம்ப கணபதி :

பாசம், அங்குசம், தந்தம், அச்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி 10 கைகளும் ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருபவர்.


லட்சுமி கணபதி :

பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பக கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அனைத்து கொண்டு வெள்ளை மேனியாய் அமர்ந்து அருள் புரிபவர்.


மஹா கணபதி :

பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அனைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை, மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர்.


புவனேச கணபதி :

கஜமுகாசுரனை தன் வாகனமாக்கிக் கொண்டு செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருபவர்.


நிருத்த கணபதி :

மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றை காலில் நிருத்த கணபதியாக காட்சி தருபவர்.

Tags:
#கணபதி  # Lord Ganapathy 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos