நிலவுக்கு செல்லும் முதல் பெண் கிறிஸ்டினா ஹம்மாக்..!

நிலவுக்கு செல்லும் முதல் பெண் கிறிஸ்டினா ஹம்மாக்..!
By: No Source Posted On: May 03, 2023 View: 62236

நிலவுக்கு செல்லும் முதல் பெண் கிறிஸ்டினா ஹம்மாக்..!

 

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-II பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


கடைசியாக 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 17 விண்கலத்தில் சென்ற கேப்டன் யூஜின் செர்னான் தான் கடைசியாக நிலவில் தரையிறங்கியவர்.


அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா ஹம்மாக் கோச், மின்சார பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.


2013 ஆம் ஆண்டில் அவர் நாசாவில் இணைந்தார். முதன்முதலாக 2019 ஆம் ஆண்டில் ரஷ்ய விண்கலமான சோயுஸ் MS-12 மூலம் தன் விண்வெளி பயணத்தை தொடங்கினார்.


பூமிக்கு மேல் விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வகம் (ISS) சென்று ஆய்வு செய்யும் பயணிகளில் நாசாவின் ஃப்ளைட் இன்ஜினியராக பங்கேற்றுள்ளார். மேலும், பெண்கள் மட்டுமே ஸ்பேஸ் வாக் செய்த சாதனையில் இவரும் பங்கேற்றார்.


இதுவரை 328 நாட்கள் இவர் விண்வெளியில் பூமியை சுற்றிவந்துள்ளார்.


இப்போது நிலவை சுற்ற தயாராகிவிட்டார்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos