பழங்களின் அரசனான, முக்கனிகளில் முதலிட மாம்பழம்..!

பழங்களின் அரசனான, முக்கனிகளில் முதலிட மாம்பழம்..!
By: No Source Posted On: May 02, 2023 View: 1919

பழங்களின் அரசனான, முக்கனிகளில் முதலிட மாம்பழம்..!


பழங்களின் அரசனான மாம்பழம் முக்கனிகளில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மாம்பழம் மார்ச் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே அதிகமாக கிடைக்கும். மாம்பழம் என்று சொன்னவுடனே நமக்கு ஞாபகம் வருவது அதன் சுவை தான், ஆனால் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.


மாம்பழம் வைட்டமின்..

மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் B6, வைட்டமின் சி, வைட்டமின் K, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.


மாம்பழம் வகைகள்

மாங்கனி வகைகள் பல்வேறு உண்டு. மாம்பழத்தின் வகைகள் வடிவம், நிறம், அளவு, ருசி போன்றவற்றை வைத்து வகைப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு வகையான பழத்திற்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் உண்டு.


மல்கோவா

பங்கனபல்லி

செந்தூரம்

அல்போன்சா

கருத்த கொழும்பான்

நீலம் மாம்பழம் (நார் மாம்பழம்)

கிரேப் மாம்பழம்

இமாம்பசந்த்

பீத்தர்

ருமானி

திருகுணி

பெங்களூரா

மனோரஞ்சிதம்

காசா

கிளிமூக்கு மாம்பழம்

கல்லா மாங்காய்

இமாயத்

கேசர்

நடுசாலை

சிந்து

விலாட்டு

செம்பாட்டான்

சேலம்

பாண்டி

பாதிரி

களைகட்டி

கொடி மா

மத்தள காய்ச்சி

பாம்பே பச்சை மாம்பழம்


மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

 

மாம்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது நமது உடலில் பல்வேறு நோய்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 

காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் சாப்பிட்ட பிறகு சிறிதளவு மாம்பழத்தை சாப்பிட வேண்டும்.
பிறகு இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் அருந்தினால் உடல் பலம் பெரும். அதுமட்டுமல்லாது மாம்பழத்தை தொடர்ந்து உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

 

மாம்பழத்தில் பல குணங்கள் உள்ளன, அவை செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. மாம்பழங்களில் அமிலேஸ்கள் அதிகம் உள்ளது, இது கடினமான உணவுகளை எளிதில் செரிக்க வைக்கிறது. அதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.

 

பல் வலி, ஈறு வலி, ஈறு வீக்கம், பல்லில் இரத்தம் வடிதல், பல் அசைவு போன்ற பிரச்சனைகள் குணமாக சிறிது மாம்பழத்தை வாயில் போட்டு எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக மென்று, 5 நிமிடம் வைத்திருந்து கீழே துப்பிவிட வேண்டும். பின்னர் உப்புநீர் கொண்டு வாய் கொப்பளித்தால் வழிகள் அனைத்தும் குணமாகும்.

 

மாம்பழத்தின் மிகவும் பிரபலமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் ஆகும். மாம்பழத்தில் உள்ள பெக்டின் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

 

மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவுகிறது. வைட்டமின் ஏ நம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் நமது கண் பார்வை மேம்படும். மாலைக்கண் நோய் பிரச்சனையும் குணமாகும்.

 

தினசரி சரியான அளவில் மாம்பழத்தை உட்கொள்வதன் மூலம் பொலிவான சருமம் மற்றும் பொலிவான கூந்தலை பெற முடியும். மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி முகப்பருவை எதிர்த்து போராடவும், அடைப்பட்ட துளைகளை சரிசெய்யவும் உதவுகிறது மற்றும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

 

மாம்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவும். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

 

மாம்பழத்தின் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இதன் காரணமாக நரம்புகள் முறுக்கேறும் மற்றும் தாது வளர்ச்சி உண்டாகும்.

 

மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.


மாம்பழம் சாப்பிட்ட உடன் ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்,


செயற்க்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும்.


பச்சை மாங்காயை அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.


நன்றாக பழுத்த மாம்பழத்தில் கலோரிகள் அதிகம் உள்ளது, இதனால் அதிகமான மாம்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க கூடும்.


ஒரே நாளில் அதிக மாம்பழத்தை சாப்பிட்டால் சிலருக்கு வாய் புண் வரும் அபாயம் உண்டு,

Tags:
#Mango Benefits  # Mango Health Benefits  # மாம்பழம்  # Mango 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos