நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவியுங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவியுங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
By: No Source Posted On: April 14, 2023 View: 14208

நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவியுங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

 

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பேசும்போது,


“சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மாஸ்க் அணிவது, கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியது, செய்யக்கூடாது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.


திமுக ஆட்சி தேர்தல் அறிக்கையில், ‘நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வோம்’ என கூறியிருந்தது. ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறியது போல் சிறையில் வாழும் இஸ்லாமியர்களை விடுவிக்க இப்போதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இஸ்லாமியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது. இதே போல தேர்தல் அறிக்கையில் கூறிய பல விஷயங்களை செய்யாமல் திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது” என விமர்சனம் செய்தார்.

 

Tags:
#VIJAYABASKAR  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos