நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன? - நரம்புத் தளர்ச்சி நீங்க...!

நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன? - நரம்புத் தளர்ச்சி நீங்க...!
By: No Source Posted On: April 10, 2023 View: 1883

நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன? - நரம்புத் தளர்ச்சி நீங்க...!


நரம்புத்தளர்ச்சி என்பது சரியான வார்த்தை இல்லை.நரம்புகள் தளர்வது இல்லை.


நம் மூளை ஒரு ஜெனரேட்டர் மாதிரி, மூளையிலிருந்த கட்டளைகளைச் செய்திகளாக எடுத்துச் செல்லும் ஒயர்களாகச் செயல்படுவது இந்த நரம்புகள்தான்.


மயலின் என்னும் வேதிப்பொருள் சூழ்ந்த லட்சக்கணக்கான சின்னச் சின்ன நரம்புகள் சேர்ந்து ஒரு பெரிய நரம்பாக தசைகளுக்குள் ஊடுருவி இருக்கும்.


எப்பொழுது எல்லாம் மூளையின் கட்டளைகள் பெரிய நரம்புகளுக்குப் போய்ச் சேருவதில் தொய்வு ஏற்படுகிறதோ, அதை நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.


சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தொய்வு ஏற்படும் பொழுது, பாதங்களில் கட்டை விரல்கள் உணர்ச்சியற்று மரத்துப் போகும். செக்ஸில் நாட்டம் இருக்காது.


சில பேருக்கு கைகள் நடுங்குவது, வேகமாகச் செயல்பட முடியாமல் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வுகள் சர்வ சாதாரணமாகத் தோன்றும்.


பாலியலில் ஈடுபாடு மிக்கவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருமாமே? - நூறு சதவிகிதம் கிடையாது.


மனநிலை, சூழ்நிலை, அதிகமான ஈடுபாடும், நாட்டமும்தான் உடலின்பத்துக்குக் காரணம். இதனால், நரம்புத் தளர்வு வராது.


ஏற்கெனவே நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் மிக அதிகமாக உடல் இன்பத்தில் ஈடுபட்டால் நரம்புப் பிரச்னைகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.


இளைஞர்களும், மாணவர்களும் கூட கைநடுங்குதல், பதற்றம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுவது ஏன்?


முதல் காரணம் புரோட்டீன். வைட்டமின்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை.


துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதும் முக்கியக் காரணம்.


மேலும், வாழ்க்கையில் பல நெறிமுறை பிறழ்ந்த மாற்றங்கள், நிறைய சறுக்கல்கள், தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் கைநடுக்கம் வரலாம்.


நரம்புத் தளர்ச்சி வராமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?


சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். எப்போதும் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக அரை வயிற்றுக்குச் சாப்பிட வேண்டும்.


எண்ணெய் அறவே ஒழிக்கக் கூடாது. ஆலிவ் ஆயில், கார்ன் ஆயில் உபயோகிக்கலாம்.


மீன் அடிக்கடி சாப்பிடலாம். இது வலுவைத் தரும். சிக்கன், மட்டனை கூடுமானவரை தவிர்த்து விடலாம்.


வானவில் நிறங்கள் அடங்கிய பழங்கள், காய்கள் சாப்பிட்டால் வாழ்வில் நடுக்கம் ஓடிப்போகும்.


கீரைகள், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, செர்ரி, தக்காளி, ஆரஞ்சுப் பழங்கள், முளைகட்டிய தானியங்களையும் சேர்த்துக் கொண்டால் நரம்புத் தளர்ச்சி வருவதை அறவே ஒழித்து விடலாம்.

Tags:
#நரம்புத் தளர்ச்சி  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos