மன அழுத்தத்தை குறைக்கும் உணவு வகைகள்...

மன அழுத்தத்தை குறைக்கும் உணவு வகைகள்...
By: No Source Posted On: March 26, 2023 View: 1396

மன அழுத்தத்தை குறைக்கும் உணவு வகைகள்...

ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் உடலையும், மனதையும் எப்போதும் புத்துணர்வுடனும், ஆற்றலுடனும் வைத்திருக்கும்.

மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என முதலில் கண்டறிய வேண்டும் , உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், விட்டமின் குறைபாடுகள், சுற்றுச்சூழல், அன்றாட வாழ்க்கை நடைமுறை என பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.


கடுமையான மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதிக கவலை அதிக வெறுப்பு ,கோபம், ஆத்திரம் என பல்வேறு விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன.


மன அழுத்தம் அதிகமானால் உடலில் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.இதனால் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக ரத்த சர்க்கரை அளவு அதிகமாகவது , படபடப்பு, சோர்வு தன்மை போன்ற ஆரோக்கியம் சார்ந்த நோய்கள் வரத் தொடங்குகின்றன.


நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். முதல் அறிகுறியாக நாள்பட்ட தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ,ஒருவகை பதற்றம், மனச்சோர்வு, செரிமான பிரச்சனை, தூக்கமின்மை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ,எடை அதிகரிப்பு என வாழ்க்கை முறை பிரச்சனைகளின் அபாயகரமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.


இயற்கையான உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை சரி செய்கின்றன. வைட்டமின்கள் பி & சி, செலினியம், மெக்னீசியம் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நேரத்திற்கு சாப்பிடுவது, பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுவது, நார்ச்சத்து ,புரதம்
உள்ள உணவுகளை அதிகளவு சாப்பிடுவது போன்ற சமநிலை தன்மையுடன் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது உடலளவிலும் மனதளவிலும் ஆற்றல் பெருகுகிறது. மனநலம் என்பது மூளை, வயிறு, செரிமான உறுப்புகளோடு நாம் அன்றாடம் உண்ணும் உணவோடும் தொடர்புடையது.


டார்க் சாக்லேட்:

பொதுவாகவே சாக்லேட்டில் கலந்துள்ள கோகோ நறுமணமானது ஒரு இதமான வாசனையை வழங்கக்கூடியதாகும். டார்க் சாக்லேட்டுகளில் இருக்கும் ஆண்டியாக்ஸிடண்டுகள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள், மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் நேர்மறை ஆற்றலை கொண்டுள்ளன.

இதன் நறுமணம், குறைந்த சர்க்கரை அளவு, அதன் ஒரு கசப்பு தன்மை போன்றன மனநிலையை இதமாக வைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக டார்க் சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்ளாமல், தேவையான நேரத்தில் குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருங்கள்.


வெதுவெதுப்பான பால்:

இரவில் நல்ல உறக்கத்தைத் தூண்டும் சத்து மிக்க பானமாக பால் அறியப்படுகிறது. இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் அருந்துவது மிகவும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. வெதுவெதுப்பான பாலை இரவு தூங்குவதற்கு முன் அருந்துவது மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என சொல்லப்படுகிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவை எலும்பை பராமரிக்க உதவும் அதேவேளை உடல் தசைகளை தளர்த்தி மற்றும் மனநிலையை உறுதிப்படுத்துகிறது.


உலர் பழங்கள் மற்றும் விதைகள்:

மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்கள் மற்றும் விதைகளை உட்கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைக்கும் என கூறப்படுகிறது. பாதாம், ஆளிவிதை, பிஸ்தா, சூரியகாந்தி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வதோ மிகவும் சிறந்தது என கருதப்படுகிறது.


நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

நார்ச்சத்து நிறைந்த காய்கறி பழ வகைகள் உடலுக்கு நன்கு ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய உணவுப் பொருட்களாகும். இவை உடலின் சமச்சீர் தன்மையை பேணுவதால் மன அழுத்தத்தை மிகச் விரைவில் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் இவை உடலையும், குடல்களையும் சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபடுவதால் மனம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.

பதற்ற , மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை குறையும் என கருதப்படுகிறது. புதிய இலை காய்கறிகள் ,பழ வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றை அளவாக உண்ணும் போது உடல் சீரான நிலையை அடையும். அப்போது மன அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்துவிடும்.


பதப்படுத்தப்படாத தானிய வகைகள்:

செரோடோனின் எனப்படும் அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை இயல்பாக இயங்க வைக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும். மேலும் ஆரோக்கியமான, பதப்படுத்தப்படாத, இயற்கையாக கிடைக்கும் தானிய வகைகளில் போதுமான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை ஹார்மோன்களை சரி செய்ய சிறப்பான முறையில் செயலாற்றுகின்றன. இவை விரைவில் ஜீரணம் அடைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஆரோக்கியமான முறையில் சாப்பிடுவதே மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி எனவும், அதற்காக யோகா, தியானங்கள், உடற்பயிற்சி என இருந்த போதிலும் நாளாந்த உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது அவை உடலை புதுப்பித்து புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது.

Tags:
#மன அழுத்தம்   # Depression  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos