பல் தேய்ப்பது மூளைக்கு நல்லதா?

பல் தேய்ப்பது மூளைக்கு நல்லதா?
By: No Source Posted On: January 27, 2023 View: 492

பல் தேய்ப்பது மூளைக்கு நல்லதா?

இதய நோய், அல்சைமர் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் கண்டால் அவர்கள் சுத்தமாக பல் தேய்க்கவில்லை என்று சொல்ல மாட்டோம் இல்லையா? ஏனெனில், நாம் பல் சுத்தம் பேணவில்லை என்றால், அதனால் பற்சிதைவு, சொத்தைப்பல், சுவாசத்தில் துர்நாற்றம் வீசுவது உள்ளிட்டவைகளை தான் சொல்வோம்.


ஆனால், வாய் சுத்தமாக இல்லாமல் இருந்தால், அது தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகள் உடலிலும் ஏற்படும் என்கிறது ஆய்வு. வாயில் உருவாகும் பாக்டீரியா உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் மூளைக்கும் கூட பாதிப்பு ஏற்படலாம்.


பொதுவாக ஒரு நபரின் வாயில் சுமார் 100 முதல் 200 வகையான பாக்டீரியாக்களும் 700 நுண்ணுயிர் இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மனிதனின் ஒரு மில்லி லிட்டர் எச்சிலில் எவ்வளவு பாக்டீரியாக்கள் இருக்கும் என்று கேட்டால், நாம் குறைவாக சொல்லக் கூட வாய்ப்புண்டு. இதற்கு சரியான விடை, ஒரு மில்லி லிட்டர் எச்சிலில் 10 கோடி பாக்டீரியாக்கள் உள்ளன.


இவை பற்கள், ஈறுகள், நாக்கு உள்ளிட்ட வாயில் எல்லா பகுதிகளும் வசிக்கும். அவைகள் கூட்டாக சேர்ந்து வசிக்கும். நாக்கின் மீது வெள்ளை நிறத்தில் படர்ந்திருக்கும். அப்படியே நம் எச்சிலில் கலந்துவிடும். வாயில் உள்ள எல்லா பாக்டீரியாக்களும் பில்லியன் கணக்கில் வளரும். இது ஓரல் மைக்ரோபையோடா (oral microbiota) என்றழைக்கப்படுகிறது.


இந்த பாக்டீரியாக்களை நாம் நன்றாக கவனித்துஜ்கொண்டால், நம் நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் நம்மை நோய்கிருமிகளிடமிருந்து காப்பார்கள்.
வாயில் உள்ள பாக்டீரியாக்களின் நன்மைகள் என்னென்ன?


வாயில் புதிதாக ஒரு பாக்டீரியா நுழைந்தால் அது அங்கு வாழ்வதென்பது சற்றே சவாலானது. ஏனெனில், அங்கு பல பாக்டீரியாக்கள் வாழ்ந்துகொண்டிருக்குமல்லவா? எச்சிலில் உள்ள பாக்டீரியாக்கள் காய்கறி மற்றும் பழங்களில் உள்ள நைட்ரேட்டை நிட்ரேட் அமிலமாக மாற்றுகிறது. இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் குறைகிறது; நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.


நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் எல்லாம் நோய்க்கிருமிகளை பரப்புபவை அல்ல. ஆனால், அதை பராமரிக்காமல் இருந்தால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களே இதற்கு காரணம்.


ஆரோக்கியமில்லாத உணவு முறை அல்லது வாய், பற்களை நன்றாக பராமரிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளால் வாயில் உள்ள பாக்டீரியாவின் எண்ணிக்கையில் சமமற்ற தன்மையை உருவாக்கும். இதனால், சில பாக்டீரியாக்கள் குறைந்துவிடும் அல்லது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது டைசிபையோசிஸ் (dysbiosis) என்று அழைக்கப்படுகிறது.


உதாரணமாக, நாம் சர்க்கரை எடுத்துகொண்டால், dental plaque எனப்படும் பற்குழிகளில் உள்ள சர்க்கரை தின்னும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். இவை சர்க்கரையை ஆர்கானிக் அமிலமாக மாற்றும். இந்த அமிலத் தன்மையை தாங்க முடியாமல் சில பாக்டீரியாக்கள் இறந்துபோகும். நாம் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், சர்க்கரை தின்னும் பாக்டீரியா அதிக அளவில் அமிலத்தை உருவாக்கும். இதனால் பற்களின் எனாமல் தேய்ந்துபோகும். இது தொடர்ந்து நீடித்தால், பற்சிதைவு, பல் சொத்தை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.


பீரியோடொண்டல் நோய்கள் (periodontal disease) எனப்படும் பற்களின் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ச்சியாக ஏற்படும் நோய்களுக்கான உதாரணமாகும். வாயில் சுகாதாரமில்லை என்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். பாக்டீரியாவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். பல் ஈறுகளில் அழற்சி உருவாகும். இது பாக்டீரியாவிற்கு உணவாக மாறும். இதன் ஆரம்ப நிலைகளில் குணப்படுத்திவிடலாம். இது ஈறு அழற்சி (Gingivitis) என்று அழைக்கப்படுகிறது. இதனால், பற்களுக்கு அருகே பாக்டீரியாக்கள் நிறைந்த பாக்கெட்டுகள் போல உருவாகிவிடும்.


ஈறுகளில் ஏற்படும் பீரியோடொண்டல் நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

பீரியோடொண்டல் பாதிப்பால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். உதராணமாக இதனால், ருமாட்டைட் ஆர்திரிடிஸ், ஆர்தோசிலரோசிஸ், உயர் ரத்த அழுத்தம், அல்சைமர், நீரிழிவு மற்றும் குழந்தை பிறப்பில் சிக்கல் உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.


பீரியண்டோன்டிடிஸ் உள்ளவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உதராணமாக, பற்களின் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான மனித செல்களால் உருவாக்கப்படும் அழற்சிக்கான திசுக்கள் போன்றவற்றால் உடலின் பல பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


பல்நல மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பதே இதற்கு தீர்வாக கூறப்பட்டுள்ளது.


பீரியோடொண்டல் உருவாக காரணமாக இருந்த பாக்டீரியாக்கள் உடலின் பல பகுதிகளுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ரத்தம் மற்றும் உணவுக் குழாய் மற்றும் செரிமான குழாய்களின் வழியே இவை உடலின் மற்ற பகுதிகளுக்கு சென்றடைகிறது. இதன் மூலம் பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் கட்டிகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது. இவை பற்களின் ஈறுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆரோக்கியமாக இருக்கும் நபர்களில் இதன் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.


சமீபத்தில், ஆராய்ச்சியாளர் குழுவினர் அல்சைமர் நோயால் இறந்தவர்களின் மூளையினை ஆய்வு செய்துள்ளனர். அதில் இந்த பாக்டீரியாக்களின் டி,என்.ஏ. இருப்பதை உறுதி செய்துள்ளனர். ஜின்ஜிபெயின்ஸ் (gingipains) என்ற என்சைம்ஸ் அதில் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இது மனித புரோட்டீன்களில் கரையக்கூடியது. இவை அல்சைமர் தீவிரமடைந்ததுடன் தொடர்பு இருந்ததையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.


ஆராய்ச்சியாளர்கள் எலிக்கு அதிகளவு பாக்டீரியத்தை செலுத்தி ஆய்வு செய்துள்ளனர். இந்த நோய்கிருமிகள் மூளை வரை சென்றதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.


விலங்குகளிடம் அல்சைமர் ஏற்படும் அளவிற்காக அறிகுறிகள் இருந்துள்ளன. ஆனால், ஆன்டி- ஜின்ஜின்பெயின் வழங்கப்பவர்களுக்கு இவ்வளவு மோசமாக இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆய்வில் போர்ஹைரோமனஸ் ஜின்ஜிவாலிஸ் (Porhyromonas gingivalis) எனப்படும் இந்த பாக்டீரியா மூளை வரை சென்றடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்று கண்டறியப்பட்டது. மேலும், இது தீவிரமடைந்தால், அல்சைமர் ஏற்படும் அபாயமும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஒருவரின் ஆரோக்கியமான உடல்நிலை என்பது அதன் மைக்ரோபையோடியா உடன் தொடர்பு கொண்டது. அதே போல, வாயின் ஆரோக்கியமும் அதில் உள்ள மைட்ரோபையோடியாவும் மிகவும் முக்கியம்.


போதிய சுத்தமின்மை, ஆரோக்கியமில்லாத டயட் போன்றவற்றால், வாயில் உள்ள பாக்டீரியாக்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இது வாயிலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


தினமும் இரண்டு வேளை பல் தேய்ப்பது அவசியம்


அமெரிக்கன் டெண்டல் அசோசியேசனின் அறிவுரைபடி, தினமும் இரண்டு முறை பற்களை சுத்தம் செய்வது, அதுவும் ஃப்ளூரைட் பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்வது (fluoride toothpaste (1,000 - 1,500 ppm)) சிறந்தது என்கின்றனர். பற்களில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் பல்நல மருத்துவரை அணுகுவது நல்லது.


புகைப்பிடித்தல், எலெக்ட்ரிக்கல் சிகரெட் உள்ளிட்டவைகளும் பற்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கும், அதனால் ஏற்படும் மற்ற நோய்களுக்கும் காரணமாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


வாய், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அழகாக சிரிப்பதற்கு நாம் முக்கியத்தும் கொடுப்பது போல, பற்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Tags:
#பல் தேய்ப்பது  # brushing teeth  # Brain  # மூளை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos