அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல்வர் கோப்பைக்கு நிதி ஒதுக்கிய உதயநிதி ஸ்டாலின்

அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல்வர் கோப்பைக்கு நிதி ஒதுக்கிய உதயநிதி ஸ்டாலின்
By: No Source Posted On: December 14, 2022 View: 3993

அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல்வர் கோப்பைக்கு நிதி ஒதுக்கிய உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தலைமைச் செயலகத்தில் உள்ள அறைக்கு வெளியே, துறையுடன் அமைச்சர் உதயநிதி பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் தனது அறைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் அமர வைத்தார். இருக்கையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக தனது அலுவலக பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்திட்டார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.


பின்னர், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க கையெழுத்திட்டார். இதற்கிடையே, மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags:
#உதயநிதி ஸ்டாலின்  # Udayanidhi Stalin  # இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  # சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்  # Minister of Youth Welfare and Sports Development  # Implementation of Special Schemes 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos