ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்
By: No Source Posted On: November 26, 2022 View: 3777

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்


பிஎஸ்எல்வி-சி 54 ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்கள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து கவுன்ட் டவுன் முடிந்ததும் முற்பகல் 11.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.


இஸ்ரோவின் ஓசன்சேட் 3 செயற்கைக்கோள் மற்றும் இந்தியா-பூடான் கூட்டு தயாரிப்பான ஐஎன்எஸ்-2 பி , அமெரிக்காவுக்கு சொந்தமான Astrocast உள்ளிட்ட மேலும் 8 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. 9 செயற்கைகோள்களும் சுமார் 20 நிமிடங்களில் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.


இஸ்ரோவின் ஓசன்சேட் 3 செயற்கைக்கோளானது, பூமி குறித்த ஆராய்ச்சிக்கும், குறிப்பாக கடலின் தன்மை குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

Tags:
#பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்  # ஸ்ரீஹரிகோட்டா 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos