பெற்றோர்களே கவனம்: இந்த உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து..

பெற்றோர்களே கவனம்: இந்த உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து..
By: No Source Posted On: November 13, 2022 View: 785

பெற்றோர்களே கவனம்: இந்த உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து..

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங்கள் பலவும், ஆரோக்கியமற்றவை.


இயல்பாக, பல குழந்தைகள் ஜங் ஃபுட்டைத் தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக சிறுவயதிலேயே அவர்கள் நோய் வாய்ப்பட காரணமாக அமைகிறது. ஜங் ஃபுட்களை அதிகம் சாப்பிடுவதால் பல நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.


ஜங் ஃபுட் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.


குழந்தைகள் ஜங் ஃபுட்களை அதிகம் சாப்படுவதால், அவர்கள் மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம், பதற்றம் மற்றும் உடற்பருமன் போன்றவை ஏற்படுகிறது.


இந்த வகை உணவுகளில் கொழுப்புச்சத்துகள் அதிகம் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு கல்வியில் கற்றல் குறைபாடு, மறதிநிலை, விழிப்பு நிலை குறைபாடு மற்றும் புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் போன்றவையும் ஏற்படுகிறது.


வறுத்த உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் சாப்பிடுவதால், உடலின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது.


சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், சில வகை ஜங் உணவுகளை குழந்தைகள் உட்கொள்வதால், அவர்களின் அறிவு மழுங்குகிறது மற்றும் மறதி அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இனிப்பு வகைகளை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகின்றது. ஆகையால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள் மற்றும் செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

 

Tags:
# உணவு  # குழந்தைகள்  # food  # children  # kids  # health  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos