WhatsApp ல் புதியதாக Community group என்ற Update..

WhatsApp ல் புதியதாக Community group என்ற Update..
By: No Source Posted On: November 12, 2022 View: 1689

WhatsApp ல் புதியதாக Community group என்ற Update..

தற்போது உலக மக்களில் பிரிக்க முடியாதது வாட்ஸப் என்ற நிலை உருவாகிவிட்டது. வாட்ஸப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க முடியாதென்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.'

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டா கவாட்ஸ் அப்பில் கம்யூனிட்டி என்ற அம்சத்தை புதிதாக கொண்டு வந்துள்ளோம். இதன் கீழ் வாட்ஸ் அப் குழுக்கள் இந்த கம்யூனிட்டி மூலம் சிறு குருப்கள், மல்டிபள் த்ரட்ஸ் போன்ற புது ஆப்ஷன்களை உருவாக்க முடியும் உருவாக்க முடியும் அதாவது ஒரு கம்யூனிட்டுக்குள் பல குரூப்களை இனணத்துக் கொள்ள முடியும்,

இனி,இதன் மூலம் நீங்கள் எந்த எந்த குழுவில் Adminஆக இருக்கறீர்களோ அந்த குழுவை ஒரே குழுவின் கீழ் கொண்டு வந்து

இதன்மூலம் ஒரே நேரத்தில் அனைத்து நபர்களுக்கும் தனித்தனியாக, சுலபமாக செய்திகள் அனுப்பலாம்.

குறிப்பு: இவ்வாறான இந்த குழுவில்,
நீங்களும் நானும் மட்டுமே இருப்பதாக மட்டும் இதில் காட்டும்(அச்சம் வேண்டாம்).


இதன் மூலம் எந்த குரூப்பில் இருந்தும் எளிதாக தகவல்களை பெற முடியும் அதேபோல் கம்யூனிட்டியின் அட்மின் எந்த ஒரு தகவல்களையும் ஒவ்வொருவருக்கும் எளிதாக தெரிவிக்க முடியும்.


ஆனால் நாம் Admin ஆக இருக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் நாம் அனுப்பும் செய்தி போகும்.

கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நேரடியாக 10,000 நபர்களுக்கு / நாம் Admin ஆக உள்ள 49 குழுக்களுக்கும் இவ்வசதி மூலம் நாம் நேரடியாக செய்தி அனுப்ப முடியும்.

நீங்கள் திரும்ப தேவைபட்டால் மட்டும் Reply செய்யலாம். இல்லையென்றால் தவிர்த்து விடலாம்.

தேவையற்ற செய்திகள் இதன்மூலம் மூலமாக வராது.

எப்படி இணைப்பது, செயல்படுத்துவது:

ஏற்கனவே வாட்ஸ் அப் வைத்திருந்தாலும் Play Store சென்று Watsapp ஐ Search செய்து Apdate செய்து கொள்ளவும்.(Phone Storage குறைவாக இருந்தால் Apdate ஆவதில் சிரமம் ஏற்படும்)

முதலில் நீங்கள் அட்மின் ஆக உள்ள வாட்ஸ்அப் குருப்பினுள் செல்லவும்..

அடுத்து மேலே வலதுபுறம் உள்ள மூன்று கோட்டை தொட்டு Group info என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து அதில் தற்போது புதிதாக உள்ள START COMMUNITY என்பதை கிளிக் செய்யவும்..

அடுத்து புதிதாக தாங்கள் புதிதாக உருவாக்கப்படும் குருப்பிற்கு பெயர் வையுங்கள்..

அடுத்து நீங்கள் அட்மினாக இருக்கக் கூடிய அனைத்து குரூப்களும் திரையில் காட்டும்..

அதில், உங்களுக்கு தேவையான குரூப்களை செலக்ட் செய்து இணைத்துக் கொள்ளலாம்.

அடுத்து, இந்த குருப்பில் தாங்கள் அனுப்பும் எந்த ஒரு பதிவும் இணைக்கப்பட்ட குரூப்களில் உள்ள அனைவருக்கும் தனித்தனியாக (Personal) சென்றடையும்.

Tags:
#WhatsApp - Community group 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos