68 அரசுப் பள்ளி மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துபாய் பயணம்

68 அரசுப் பள்ளி மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துபாய் பயணம்
By: No Source Posted On: November 10, 2022 View: 3189

68 அரசுப் பள்ளி மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துபாய் பயணம்


2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை மாநில அளவில் தேர்வு செய்தனர்.


அதன்படி, 68 மாணவ-மாணவிகளை கல்வித்துறை தேர்வு செய்து இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.


அந்த வகையில் 68 மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல உள்ளார். மாணவர்களின் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய்க்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

 

வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை துபாயில் இருக்கும் அவர்கள், அங்கு ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் பங்கு பெற உள்ளனர். இதனிடையே இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டுவிட்டரில், "மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளோடு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு சார்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags:
#அமைச்சர் அன்பில் மகேஷ்   # துபாய்  # 68 அரசுப் பள்ளி மாணவர்கள்  # TN Govt school students  # Dubai. Anbil Mahesh  # TN Education Minister  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos