எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன்! - உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல. பொறுப்பு... மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி.
* நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள்.
* துணை முதலமைச்சராகும் எனக்கு வரும் வாழ்த்துகளை போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன்.
* எல்லா விமர்சனங்களையும், வரவேற்கிறோம். எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன் என்றார்.